ரெட் அலர்ட்.! மக்களுக்கு அவரச எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு

First Published | Nov 26, 2024, 9:07 AM IST

 தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

heavy rain in tamilnadu

தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவித்தது. குறிப்பாக,  26.11.2024 அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், 27.112024 அன்று கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப் பொழிவு ஏற்படக் கூடும் மேலும், கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

Tamil Nadu Rains

22.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய தேதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும். கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 23.112024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன. மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


Tamil Nadu Rains

 கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட ஒருங்கிணைந்து கண்காணித்திட நிருவாகத்துடன்

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப. (94999 56205, 88006 56753)

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திருமதி. கவிதா ராமு. இஆப. (90032 97303)

திருவாரூர் மாவட்டத்திற்கு திருமதி. காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப. (73388 50002)

கடலூர் மாவட்டத்திற்கு திரு.எஸ்.எ.ராமன், இ.ஆ.ப. (9445883226)

ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

kerala rain

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர. தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

Rain

கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாய பெருமக்கள். பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்துமாறும் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

click me!