சின்ன வெங்காயம் ஒரு கிலோ 10 ரூபாய்.! சரசரவென சரிவு- பெரிய வெங்காயம் விலை எவ்வளவு தெரியுமா.?

First Published | Nov 26, 2024, 7:38 AM IST

தக்காளி விலை குறைந்த நிலையில், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தையில் சரிந்துள்ளது. மழை மற்றும் பனி காரணமாக வெங்காயம் அழுகியதால், விவசாயிகள் குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

tomato and onion

சமையலும் காய்கறியும்

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில வாரங்களாக ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்காளி,பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையானது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதனால் கிலோ கணக்கில் வாங்கிச்சென்ற மக்கள் குறைந்த அளவே வாங்கும் நிலை உருவானது. இதனையடுத்து எப்போது விலை குறையும் என இல்லத்தரசிகள் காத்திருந்தனர்.

ONION

பெரிய வெங்காயம் விலை என்ன.?

அந்த வகையில் தக்காளி விலையானது கடந்த மாதம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 முதல் 30 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனையாகிறது. இதனால் 5 கிலோ 100 ரூபாய்க்கு மக்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளது. அதே நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை மட்டும் குறையவில்லை. தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. பெரிய வெங்காயத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கத்தின் காரணமாக அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மழை பாதிப்பு காரணமாகவும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருந்தது.
 

Latest Videos


onion

கோயம்பேட்டில் வெங்காயம் விலை

இதனையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலையானது 50 முதல் 70 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனையாகிறது.
 

Small Onion

சரிந்தது சின்ன வெங்காயம் விலை

இந்த நிலையில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலையானது சரிந்துள்ளது.  தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மா பட்டி, எல்லப்பட்டி, குத்திலுப்பை, வாசிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்காகவும், மொத்தமாகவும் அனுப்பப்படும். இந்த நிலையில் மே மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராக இருந்தது. 
 

onion


ஒரு கிலோ 10 ரூபாய்

சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகளவு அதிகரித்து நிலையில் வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அறுவடை செய்யாமல் விவசாயிகள் காத்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் தொடர் மழை மற்றும் பனியின் தாக்கம்   காரணமாக வெங்காயங்கள் நிறம் மாறி அழுகியதாக தெரிகிறது. மேலும் ஈரத் தன்மையால் வெங்காயம் முளைக்கத் தொடங்கியது.  

இதனால் தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் கிராம பகுதிகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ஒரு கிலோ 10 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. மேலும் அழுகிய வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலை உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். . 

click me!