"நம் மீது இத்தனை விமர்சனங்கள் வருவதற்கு காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லையே, பா.ஜ.க.வோடு உறவாடவில்லையே, பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்யக் கூடிய ஆளாக திருமாவளவன் இருக்கிறாரே, சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறாரே, தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவர் உற்ற துணையாக இருக்கிறாரே என்பதுதான். இதுதான் அவர்களின் உண்மையான பிரச்சினை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியின் பலத்திற்காக வி.சி.க.வின் நிலைப்பாடு முக்கிய காரணமாக இருப்பதாலேயே, தங்கள் கட்சியை இலக்கு வைத்து எதிர்க்கருத்துகள் முன்வைக்கப்படுவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.