சுடச்சுட மட்டன் பிரியாணியோடு சிக்கன் 65 லெக் பீஸ்! 5 லட்சம் பேருக்கு திமுக மாநாட்டில் தயாரான ருசியான சாப்பாடு

First Published Jan 21, 2024, 1:14 PM IST

திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்றுள்ள திமுகவினருக்கு மட்டன் பிரியாணி கொடுக்கும் வகையில் 5 லட்சம் பேருக்கு பிரியாணியோடு சிக்கன் 65 தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

திமுக இளைஞர் அணி மாநாடு

நாடாளுமன்ற தேர்தல் எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முன்னதாக நேற்று கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஆயிரம் டிரோன் மூலம் வானத்தில் திமுக முன்னோடிகளின் படங்கள் காட்சியளித்தது. இதனையடுத்து இன்று காலை திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக மாநாட்டில் 25 தீர்மானங்கள்

இந்த மாநாடு தொடங்கியதும். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  25 தீர்மானங்களை கொண்டு வந்தார். அதன் படி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக்கிய மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும்  நாட்டில் உள்ள இந்துக்களின் பெரும்பான்னை மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு ராமர் கோவிலை காட்டி இந்துக்கள் ஓட்டுகளை வாங்கி விடலாம் என அரசியல் செய்யும் பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற களப்பணியாற்றிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது. 

Latest Videos


கருப்பட்டி அல்வாவுடன் காலை உணவு

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாற்காழியில் மஞ்சள் பையில் மிச்சர், பிரட், ஐஸ்கிரீம், மேரி பிஸ்கட், வொண்டர் கேக், தண்ணீர் பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழங்கப்பட்ட காலை உணவில், சிகப்பு அரிசி இட்லி, முடக்கத்தான் தோசை, கருப்பட்டி அல்வா, பூரி, பொங்கல், வடை, சாம்பார், காரசட்னி, தக்காளி சட்னி, உருளைக்கிழங்கு பூரி மசாலா உள்ளிட்டவை 5ஆயிரம் பேருக்கு சிறப்பு உணவாக வழங்கப்பட்டது.

உதயநிதியை இருகப்பற்றிக்கொள்ளுங்கள்.. அசைக்க முடியாத கோட்டையாக இளைஞர் அணியை மாற்றிவிட்டார்- மு.க.ஸ்டாலின்
 

சுடச்சுட மட்டன் பிரியாணி

பரபரப்பாக நடைபெற்று வரும் மாநாட்டிற்கு மத்தியில், மதியம் உணவாக சுடச்சுட பிரியாணி தயாரிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட ஆடுகள், 1000க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு  திருச்சியில் புகழ் பெற்ற சமையல் கலைஞர்களை கொண்டு மட்டன் பிரியாணி,  சிக்கன் 65 தயாரிக்கப்பட்டு இதோடு சேர்த்து புளி கத்தரிக்காய், பிரட் அல்வா  மற்றும் தயிர்சாதம் உள்ளிட்ட உணவுகள் பிளாஸ்டிப் டப்பாவில் அடைத்து வழங்கப்பட்டது. 
 

விஐபிக்களுக்காக தயாரான அக்கார வடிசல்

இதே போல மாநாட்டில் கலந்து கொண்டுள்ள விஐபிக்களுக்கு அக்கார வடிசல், சப்பாத்தி, கடாய் வெஜ், பன்னீர் பிரியாணி, பேபிகான் 65, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், உருண்டை மோர்க்குழம்பு கேரட் பீன்ஸ் பொரியல்,  கோஸ்அவியல், வாழைப்பூ வடை, அடைப்பிரதமன், அப்பளம், மோர் மிளகாய், ஊறுகாய், வாழைக்காய் சிப்ஸ், வாழைப்பழம், பீடா ஜஸ்கீரிம் போன்றவை வழங்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்

இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என அம்பலப்படுத்துவோம்.. இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி தீர்மானம்

click me!