உச்சத்திற்கு சென்ற கேரட், அவரைக்காய் விலை.. கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம் விலை என்ன தெரியுமா.?

First Published Jan 21, 2024, 7:43 AM IST

காய்கறிகள் பல்வேறு ஊர்களில் இருந்து மொத்த காய்கறி சந்தையான கோயம்பேட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது. 

Vegetables Price Koyembedu

உருளைக்கிழங்கு விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

பட்டர் பீன்ஸ் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

Latest Videos


உச்சத்தில் கேரட் விலை

கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை 40 ரூபாய்க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Vegetables Price Today

இஞ்சி விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில்  விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. அதற்கு முன் ராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி - வீடியோ!

click me!