
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தான் தவெக என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். இப்போது அவர் கட்சி தொடங்கியதற்கான கால நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக இறங்கி கட்சி வேலைகளை செய்து வருகின்றன.
விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து பல விதமான சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். அதற்கு சிறந்த உதாரணம் தான் கரூர் சம்பவம். இதே போன்று ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் சர்ச்சை. இப்போது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து என்று பல விதமான சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் விஜய் தனது அரசியல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
ஏற்கனவே பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து தனது முதல்கட்ட தேர்தல் அறிக்கையாக பல சலுகைகளை அறிவித்தார். தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் விஜய்யின் தவெக கட்சியின் முழு தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான் தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமீபத்திய தகவல்களின்படி சில தொகுதிகள் பலமாகப் பேசப்படுகின்றன:
வட சென்னை - பெரம்பூர்:
சமீபத்திய தகவல்களின்படி விஜய் வட சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பின்தங்கிய மற்றும் உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்களின் தோழனாகத் தன்னைக் காட்ட அவர் விரும்புவதாகத் தெரிகிறது.
விருகம்பாக்கம் :
அவரது இல்லம் மற்றும் அலுவலகம் இருக்கும் பகுதி என்பதால் இது ஒரு "பாதுகாப்பான" தொகுதியாகக் கருதப்படுகிறது.
திருச்சி கிழக்கு: "திருச்சி திருப்புமுனை" என்பார்கள். மத்திய தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்த திருச்சியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே செய்திகள் வருகின்றன.
வட சென்னை வியூகம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாகக் கருதப்படும் வட சென்னையில் போட்டியிடுவதன் மூலம், ஆளுங்கட்சிக்கு நேரடி சவால் விடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இரண்டு தொகுதிகள்:
பாதுகாப்பிற்காகவும், செல்வாக்கை நிரூபிக்கவும் விஜய் சென்னை மற்றும் திருச்சி என இரண்டு தொகுதிகளில் கூட போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி இந்த 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் தான் முதலமைச்சராக வருவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு தொகுதியில் வெற்றி பெறுவது விஜய்யின் சட்டமன்ற வருகையை உறுதி செய்யும். ஆனால், அவர் முதலமைச்சராக வேண்டுமானால்: தவெக தனிப் பெரும்பான்மை அதாவது 118க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? குளு குளு அப்டேட்!
இதற்கு முன்னதாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் 105,267 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் இதுவரையில் அறிவிக்கப்படாத நிலையில் என்ன நடக்கிறது என்பதையும், விஜய் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். விஜய் முதல் முறையாக போட்டியிடும் நிலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஒரே தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா.. கடைசில என்ன ஆச்சு தெரியுமா..?