5 Shocking Narrow Margin Defeats in TN Election: தமிழக தேர்தல் வரலாற்றில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய 5 விஐபி வேட்பாளர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. பொதுவாக தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் ஒரு ஆயுதம் என்பார்கள். ஏனெனில் ஒரு சில வாக்குகள் தான் ஒரு வேட்பாளரின் 5 ஆண்டு கால அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தமிழகத் தேர்தல் வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. கடந்த காலத் தேர்தல்களில், வெற்றியின் வாசல் வரை சென்று வெறும் சில நூறு வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட 5 முக்கிய விஐபி வேட்பாளர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
26
வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த அப்பாவு
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், திமுகவின் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றனர். 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட அப்பாவு, . தபால் வாக்குகளை சரியாக எண்ணவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுமார் 7 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடந்த நிலையில், பிப்ரவரி 2023ல் இன்பதுரை வெற்றி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு வலிமையானது என்பதற்கு இன்றும் இந்தத் தொகுதியே பெரும் உதாரணம் ஆகும்.
36
நூலிழையில் தோல்வியுற்ற திருமாவளவன்
2016 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியைத் தழுவினார். இந்த தொகுதியில் முருகுமாறன் 48,450 வாக்குகளும், திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 2,376 வாக்குகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்த்த தொகுதி கோவை தெற்கு. இந்த தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டார். பாஜகவின் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்ற நிலையில், கடைசி வரை போராடிய கமல்ஹாசன் 51,481 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
56
பெண் வேட்பாளரிடம் நெருங்கி வந்து தோல்வி கண்ட எல்.முருகன்
2021 தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் அப்போதைய தமிழக பாஜக தலைவராகவும், இப்போதைய மத்திய அமைச்சராகவும் உள்ள எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் வெறும் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். கயல்விழி செல்வராஜ் 92,987 வாக்குகளும், எல். முருகன் 91,594 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
66
டாக்டர் கிருஷ்ணசாமி
2016 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனிடம் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.