அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? குளு குளு அப்டேட்!

Published : Mar 22, 2026, 02:33 PM IST

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் பாடாய்படுத்தி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கேரளாவை போல் தமிழகத்திலும் வெயிலுக்கு குடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலுக்கு இதமாக மழை பெய்யாதா? வருண பகவன் கருணை காட்ட மாட்டாரா? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.

24
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குளு குளு அப்டேட் கொடுத்துள்ளது. க‌டந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மார்ச் 22ம் தேதி (இன்று) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

34
கோவை, நீலகிரி மாவட்டங்கள்

மார்ச் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25ம் தேதி மற்றும் 26ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

44
வெயில் எப்படி இருக்கும்?

22ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories