TVK Vijay: தவெக தலைவர் விஜய் கரூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் விளக்கம் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
கரூர் பகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த போது வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பை பார்த்து மெய்சிலித்துபோனார். பின்னர் கரூரில் வேலுசாமிபுரம் பகுதிகளில் விஜய் பேச தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். கூட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆம்புலன்சாக கரூர் மருத்துவமனையை நோக்கி விரைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
24
கரூரில் 36 பேர் பலி
தற்போது வரை உயிரிழந்தவர்களில் 16 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் மயக்க நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து வருகிறார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இன்று இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைகிறார்.
34
காவல்துறையினர் குளறுபடிகள்
இதனிடையே பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியிருந்தார்.
இந்நிலையில் கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தரப்பிலோ அல்லது அக்கட்சியின் தலைவர் விஜயோ விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.