விஜய் அரசு அதிரடி அறிவிப்பு.. ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் விரிவாக்கம்!

Published : Aug 24, 2026, 10:18 AM IST

Vijay Government Big Announcement: தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளின் விவரங்களை காணலாம்.

PREV
15
தமிழக அரசு அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பங்களுக்கான இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்ட விரிவாக்கம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட சில திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குடும்பச் செலவு, பெண்களின் போக்குவரத்து செலவு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதிப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

25
3 இலவச சிலிண்டர்கள்

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் முதற்கட்டமாக, தமிழக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று சிலிண்டர்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் விலை உயர்வால் குடும்பங்களின் மாதச் செலவு அதிகரித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! ரூ.5 லட்சம் டூ ரூ.25 லட்சமாக உயர்ந்த காப்பீடு – விண்ணப்பிப்பது எப்படி?

35
அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்

இந்தத் திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கும் சில தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தகுதியான குடும்பங்களும் பயன்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது முதல் கட்டமாக 3 சிலிண்டர்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பயனாளிகளின் இறுதிப் பட்டியல் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
பெண்களுக்கு இலவச பேருந்து

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தையும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இயங்கும் சில பேருந்துகளுக்கு மட்டுமே இருந்த பயண வசதி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர், மலைப்பகுதி மற்றும் சாதாரண கட்டண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது. தகுதியான பெண்களுடன் திருநங்கைகளும் இந்தப் பயண வசதியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

55
பரந்தூர் விமான நிலையத் திட்டம்

இதனிடையே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வரும் மக்களின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, பரந்தூர் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். விமான நிலையம் அமைப்பதற்காக குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய விமான நிலையத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்யும்போது, ​​பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் இடங்களை பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இலவச சிலிண்டர், பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயணம் மற்றும் பரந்தூர் திட்டம் தொடர்பான முடிவு ஆகியவை இந்த அறிவிப்புகளில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories