கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய், ஏற்கெனவே சிபிஐ அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம் காலை 11 மணி முதல் மாலை 3.45 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது விஜய்யிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன. மக்கள் மயங்கி விழுந்தும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? கரூர் கூட்டத்துக்கு என் தாமதமாக வந்தீர்கள்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
நாளை 2வது முறையாக விசாரணை
விசாரணை முடிந்த பிறகும் விஜய் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனி அறையில் அமர வைக்கப்பட்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவர் கூறிய பதிலையும் பிரிண்ட் செய்து கொண்ட சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான் நாளை 2வது நாளாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடைபெற உள்ளது.