தொடர்ந்து பேசிய விஜய், ''நான் மீண்டும் சொல்கிறேன் வரும் தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி. இந்த போட்டி இன்னும் ஸ்ட்ராங் ஆக இருக்கும்'' என்று கூறினார். விஜய் சொன்னதை கேட்டதும் கூட்டத்தில் இருந்த தவெக நிர்வாகிகள் ஆர்ப்பரித்தனர். ஆனால் விஜய்யின் பேச்சு அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையார் சுழி போட்டிருந்த இபிஎஸ்
ஏனெனில் கரூர் விவகாரத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் விஜய்க்கு எதிராக நிற்க, அதிமுகவும், பாஜகவும் ஆதரவாக நின்றன. இந்த விவகாரத்தில் விஜய் பக்கம் நின்று திமுக அரசை வெளுத்தெடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால் தவெக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பேசத் தொடங்க, இபிஎஸ்ஸும் இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தார்.