விஜய் கைதாக வாய்ப்பு...??தொடர் உயிர் ப**லிகளால் கடும் சிக்கலில் தவெக

Published : Sep 27, 2025, 09:14 PM IST

நடிகர் விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
13

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கவலையான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

23

இந்த நிலையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் காலை 8.45 மணிக்கு தான் சென்னையில் இருந்தே புறப்பட்டார். ஆனால் காலை 6 மணியில் இருந்து ஏராளமான மக்கள் காத்திருந்தனர். ஆனால் விஜய் மதியம் 2.30 மணிக்கு தான் நாமக்கல் பகுதிக்கே வந்தடைந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு கரூர் பகுதிக்கு விஜய் புறப்பட்டு சென்றார். காலையில் இருந்து பல ஆயிரம் மக்கள் வெயிலில் காத்திருந்தனர். ஆனால் விஜய் மதியல் 12 மணியளவில் கரூர் பகுதிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 7.30 மணிக்கை கரூர் வந்தடைந்தார்.

33

இதன் காரணமாக மூச்சு கூட விட இடமில்லாத வகையில் கூட்டமானது அதிகரித்திருந்து. இதனால் ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலர் மூச்சு திணறி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.  இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியானார்கள். 

இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போலீசாரின் பல்வேறு நிபந்தனைகளை தவெக கண்டுகொள்ளவில்லையென்றே கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories