((பேசிக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ்க்கு வழி விட சொன்ன விஜய் தன்னுடைய பேச்சை சில வினாடிகள் நிறுத்தினார்))
(கூட்டத்தில் தண்ணீர் கேட்ட மக்களுக்கு வாகனத்தில் இருந்தபடியே தண்ணீர் வழங்கிய விஜய்) (( கூட்டத்தில் மயங்கிய ஒருவரை ஆம்புலன்ஸ் ஏற்ற அறிவுரை))
விமான நிலையம் கட்டினால் இங்கு உள்ள ஜவுளி தொழில்கள் முன்னேறும் என்பது உண்மையான விஷயம் தான் ஆனால் பரந்தூர் போல மக்கள் பாதிக்காத வண்ணம் இடங்களை தேர்வு செய்து விமான நிலையம் கட்டினால் நல்லது.. கரூரின் தீராத தலைவலியாக மணல் கொள்ளையும், கல்குவாரிகளும் கரூரின் கனிம வளத்தை அழித்துக் கொண்டிருக்கிறது இதற்கு காரணம் யார் சிஎம் சார்...
11 மணிக்கு பதவி ஏற்பு நடந்தால் 11.05க்கு மணல் கொள்ளை செய்யலாம் என்று வெளிப்படையாக பேசியவர்கள் தானே திமுகவினர். 2026 இல் மணல் கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணும் ஆட்களிடம் இருந்து காவிரி தாய்க்கும் கருருக்கும் விடுதலை வேண்டுமா? வேண்டாமா???? நிச்சயம் கிடைக்கும் கவலைப்பட வேண்டாம்