செந்தில் பாலாஜி கோட்டையை அசைத்துப் பார்த்த விஜய்..! பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் கரூரில் பரபரப்பு

Published : Sep 27, 2025, 07:10 PM IST

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதிக்கப் பகுதியில் விஜய் பெரும் கூட்டத்தை ஈர்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், "உங்க விஜய் நா வரேன்" மக்கள் சந்திப்பு பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பொதுமக்களை சந்தித்தார். இதில் குறிப்பாக கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஏனென்றால், கரூர் திமுகவின் "கோட்டை" என்று அழைக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தது, அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

24

செந்தில் பாலாஜியின் 'கோட்டை': கரூர் மாவட்ட திமுக செயலாளரான செந்தில் பாலாஜி, 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூரை 50,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வென்றவர். அவர் தலைமையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா'வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதைப் பாராட்டி, "கோடு போட சொன்னால் ரோடு போட்டுவிடுவார்" என்று புகழ்ந்தார்.

34

இந்த விழா, கரூரை திமுக 'கோட்டை'யாக உறுதிப்படுத்தியதாகவும், விஜய்யின் வருகை அதை சவால் செய்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விஜய், கரூர் வேலுச்சாமிபுரம் உழவர் சந்தை பகுதியில் பிரச்சார வாகனத்தில் பேச அனுமதி கோரியபோது, போலீஸ் ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை, ஆனால் காலம் தாழ்த்த நிலையில் தான் நேற்று முன் தினம் தான் அனுமதி கிடைத்தது.

44

கரூர் நுழைவு வழித்தடத்தில் மட்டும் பல ஆயிரக்கணக்கான தவெக ஆதரவாளர்கள் திரண்டு, விஜய்யை வரவேற்றனர். இது திமுக முப்பெரும் விழாவை விட அதிகம் என்று தவெக தரப்பினர் கூறுகின்றனர். முன்னதாக விஜய் நாமக்கல்லில் மக்களிடம் பேசும் போது, நாமக்கலில் கிட்னி திருட்டு வழக்கு, திமுகவின் தேர்தல் வாக்குறுதி, திமுக பாஜக ரகசிய கூட்டணி என விமர்சித்து பேசியிருந்தார். இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கூடிய கூட்டத்தில் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories