Admk ஒரு மேட்டரே இல்ல..! கொள்ளையடிக்கிற திமுகவா.. கொள்கையோடு இருக்க தவெக வா? சீண்டும் விஜய்

Published : Sep 27, 2025, 03:43 PM IST

நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜகவுடன் திமுக ரகசிய உறவில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

PREV
16
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தனது முதல் பிரச்சார பயணத்தை விஜய் தொடங்கினார். இதுவரை திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த விஜய் இன்று நாமக்கலில் கே.எஸ்.திரையரங்கம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக குறித்து கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

26
நாமக்கல்லில் விஜய்

எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டும் தான் சொல்லுவோம். எது உண்மையோ அதைத்தான் சொல்வோம், செய்வோம். இந்த திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்க மாட்டோம். நாமக்கலில் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக நிர்வாகி சொந்தமான மருத்துவமனை கிட்னி திருட்டு நடந்துள்ளதாக கூறுகிறார்கள். நாமக்கல்லில் ஏழைப் பெண்களை குறி வைத்து கிட்னி திருட்டு நடந்துள்ளது. குறிப்பாக விசைத்தறி தொழிலாளி வாழ்க்கை தரத்தை திமுக உயர்த்தாததே கிட்னி திருட்டுக்கு காரணம். விசைத்தறி தொழிலாளர்கள் வறுமையின் காரணமாக கிட்னியை விற்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

36
திமுக அண்டர் கிரவுண்ட் டீலிங்

நான் ஏற்கனவே கூறியது தான் மீண்டும் இங்கு தெரிவிக்கிறேன் ஒன்று இந்த பாசிச பாஜக அரசு உடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப் போக மாட்டோம் இரண்டாவது இந்த திமுக அரசு மாதிரி அண்டர் கிரவுண்ட் டீலிங் மறைமுக உறவுக்காரர்களாக இந்த பாஜகவோட எப்பொழுதும் இருக்க மாட்டோம் மூன்றாவது மூச்சுக்கு முன்னுறு தடவை அம்மா அம்மா என்று என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா அவர்கள் சொன்ன விஷயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு பொருந்தா கூட்டணியை அமைத்துக் கொண்டு கேட்டால் தமிழ்நாட்டோட நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என சொல்லிக்கிறார்கள் அதிமுக மாதிரி நாம் இருக்க மாட்டோம்.

46
பாஜக அரசு

இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன் இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது நீட்டை ஒழித்து விட்டார்களா? கல்விக்கு தேவையான முழு நிதியை கொடுத்தார்களா தமிழகத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களைத் செய்துவிட்டார்களா அப்புறம். பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேட்கவில்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய உண்மையான தொண்டர்கள் அவர்கள் கேட்கிறார்கள்.

56
அதிமுக- பாஜக நேரடி உறவு

அதிமுக- பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்களுடைய கூட்டணி மேலே மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கை இல்லை என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே சமயம் இந்த திமுக குடும்பம் இந்த பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அடுத்த வருடம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தால் அது பாஜகவிற்கு வாக்களித்தது போல் தான். வெளியில் அடித்துக் கொள்வது போல் தெரியும் ஆனால் உள்ளுக்குள் வேண்டாம் மக்களே ஜாக்கிரதையாக யோசியுங்கள்.

66
விஜய் அட்டாக்

அதனால் தான் திரும்பவும் சொல்கிறேன் 2026 இல் ரெண்டே பேருக்கு தான் போட்டி ஒன்னு த.வெ.க இன்னென்று தி.மு.க . ஒன்னு மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எலியோரின் குரலாய் இருக்கின்ற களத்தில் இருக்கின்ற தமிழக வெற்றி கழகம் மற்றொன்று கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவிட்டு கொள்ளையடிச்சு தமிழ்நாட்டை ஏமாத்துற இந்த திமுக இந்த இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டி என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories