இந்த எலக்ஷன் ஓட அதிமுக அவுட்! விஜயகாந்தை விட விஜய் தான் மாஸ்! இபிஎஸ் வெறுப்பேற்றும் TTV.தினகரன்!

Published : Sep 27, 2025, 02:55 PM IST

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், 2026ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும் என கணித்துள்ளார். நடிகர் விஜய் கட்சிக்கு வந்த பிறகு சீமானின் பேச்சு தடுமாற்றமாக உள்ளது என்றும், விஜயகாந்தை விட விஜய் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்.

PREV
14
டிடிவி.தினகரன்

சென்னை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: 2021 தேர்தலைவிட 2026ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தன் வகையில் கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார். ஒபிஎஸ்சும் நானும் தொலைபேசியில் அடிக்கடி பேசுவோம். நேற்று நேரில் வந்ததால் பேசிக்கொண்டு இருந்தோம், தவிர அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமி துரோகத்திற்கு எதிராக 8 ஆண்டுகளாக அரசியல் கட்சியை நடத்தி வருகிறோம்.

24
எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையனின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் யாரையெல்லாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம் என்ற கருத்தில் உடன்பாடு இல்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை.

34
சீமானுக்கு எச்சரிக்கை

கடந்த ஒராண்டாகவே சீமானின் பேச்சு தடுமாற்றமாகவும், கோபத்தின் வெளிபாடாகவும் உள்ளது. குறிப்பாக விஜய் கட்சிக்கு வந்த பிறகு தம்பி விஜய், நாங்கள் ஒன்றாக செயல்படுவோம் என பேசினார். இப்போது விஜயால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பேசுவது போல் உள்ளது. அண்ணா, எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது. விஜய் மீது கோபம் இருந்தால் அவரை பற்றி தான் பேச வேண்டும்.

44
விஜய்க்கு ஆதரவாக டிடிவி.தினகரன்

மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் எற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்கடுமையாக இருக்கும். தமிழக அரசியலில் விஜயகாந்தை விட விஜய் அதிகளவிளான தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியேறியதில் இருந்து விஜய்க்கு ஆதரவாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories