தவெகவிற்கு ஷாக்.! சிபிஐ விசாரணை கோரி நாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை.! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்

Published : Oct 13, 2025, 10:36 AM IST

கரூரில் தவெக கூட்ட நெரிசல் கோரி சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு வரவிருந்த நிலையில், மனுதாரர்கள் எனக் கூறப்பட்டவர்கள் தங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்றதாகக் கூறி பரபரப்பு

PREV
13

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தவெக கரூர் மாவட்ட செயலாளர், சேலம் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடி நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட்டு உத்தரவிட்டது.

23

இதனையடுத்து கரூரில் அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களாக பிரபாகர், செல்வராஜ், பன்னீர் செல்வம் ஆகியோர் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்வியை எழுப்பியிருந்தது.

33

இதனையடுத்து இன்று சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், திடீரென பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் தங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்று வழக்கில் தங்களை மனுதாரர்களாக இணைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

பிரபாகர், செல்வராஜ், பன்னீர் செல்வம் ஆகியோர மனு தாக்கல் செய்யவே இல்லையெனவும் கூறியுள்ளனர். இன்று தீர்ப்பு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் என்ன முடிவு எடுக்கும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories