தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சில இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. பின்னர் கோடை வெயில் தொடங்கியதை அடுத்து பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியது. இதனால் இயல்பை விட வெயிலின் தாக்கம் மற்றும் புழுக்கம் அதிகமாக இருந்தது.
24
100 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயில்
கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதலே பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி பதிவாகியுள்ளது. அதாவது மதுரை விமான நிலையம் - 102.92 டிகிரி, கரூர் பரமத்தி - 101.3 டிகிரி, மதுரை நகரம் - 100.76 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் -100.76 டிகிரி, திருச்சி - 100.58 டிகிரி, தூத்துக்குடி - 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
34
மிக கனமழைக்கான எச்சரிக்கை
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.