தமிழ்நாட்டில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்திய நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
24
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தால் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது தொடர்பாக முடிவெடுப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இப்போது வெயிலின் தாக்கம் அந்த அளவுக்கு இல்லை என்பதால் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
பள்ளிகளில் சீரமைப்பு பணிகள்
இந்த நிலையில், பள்ளிகளை மீண்டும் திறக்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளதால் முன்னேற்பாட்டு பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. அரசு பள்களில் மாணவர்கள் உட்காரும் பெஞ்ச் சீரமைப்பு, கழிவறைகள் சீரமைப்பு, சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
34
பள்ளி திறந்த முதல் நாளிலேயே புத்தகம்
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப் புத்தகங்கள் வழங்குவதற்காக பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள புத்தக காப்பு மையங்களுக்கு புத்தகஙக்ள் கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் எந்த ஒரு பள்ளிகளுக்கும் விடுபடாமல் புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி நோட்டு புத்தகம், காலணி, சீருடை, பயண அட்டை, சைக்கிள், புத்தக பை, கணித உபகரணம், வண்ண பென்சில், புவியியல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.