உயரும் காய்கறி விலை..! உச்சத்தை நோக்கி செல்லும் இஞ்சி- கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா.?

Published : Sep 01, 2023, 08:14 AM ISTUpdated : Sep 01, 2023, 08:41 AM IST

காய்கறி விலை நேற்று முன்தினம் சற்று குறைந்து இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை நோக்கி செல்கிறது. குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விலை சற்று அதிகரித்துள்ளது.   

PREV
14
உயரும் காய்கறி விலை..! உச்சத்தை நோக்கி செல்லும் இஞ்சி- கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா.?
Vegetables Price Today

காய்கறி விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறியானது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் இருந்து சென்னை கோயம்பேடு மொத்த சந்தைக்கு வருகிறது. அங்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையானது ஏறி இறங்கி வருகிறது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்,  பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

24
Vegetable price in chennai

சற்று உயர்ந்த காய்கறி விலை

உருளைக்கிழங்கு விலை ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு, முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கேரட் ஒரு கிலோ 50 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கத்தரிக்காயை பொருத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்,  பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

34
Tomato price in chennai

ஒரே விலையில் நீடிக்கும் தக்காளி

தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்து. ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது படிப்படியாக தக்காளி விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை 30 மற்றும் 35 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. இன்றைய விலையானது ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

44
Ginger Price Increased

உச்சத்தில் இஞ்சி

இஞ்சி விலையும் கடந்த சில நாட்களாக ஏற்றமாகவே காணப்பட்டு வருகிறது.  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு கிலோ இஞ்சி 180 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 240 வரை விற்பனை செய்யப்படுகிறது

click me!

Recommended Stories