Vegetable Price: இனி தினமும் விஜிடபுள் பிரியாணிதான்.! கூடை கூடையாய் விற்று தீர்ந்த காய்கறிகள்.!

Published : Nov 17, 2025, 09:22 AM IST

Vegetable Price: தமிழகத்தில் தொடர் மழை பெய்தாலும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்து, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
பை, கூடைகளுடன் குவிந்த பெண்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கோயம்பேட்டு சந்தையில் இன்று காய்கறி வரத்து அதிகரித்திருப்பது விலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவியுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்று அதற்கு மாறாக பல காய்கறிகளும் மிகவும் குறைந்த விலையில் கிடைத்ததால் இல்லத்தரசிகள் முகத்தில் புன்னகை துளிர்த்தது.

24
வாங்கிச்செல்ல கணக்கு பார்க்கவில்லை

பெரிய வெங்காயம் கிலோக்கு ₹7  முதல் 15 வரையிலும், சின்ன வெங்காயம் ₹30 முதல் 70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ₹17 முதல் 28 என வழக்கத்தை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. வரத்து அதிகரித்ததால் குறிப்பாக தக்காளியும் வெங்காயமும் விலை ஏறாமல் நிலைத்திருக்கிறது. இதனால் இன்று கணக்கே பார்க்கத் தேவையில்லை!” என்று பலரும் கூடுதல் பைகளில் காய்கறிகளை வாங்கி நிரப்பிச் சென்றனர்.

பீட்ரூட்  அதிகபட்சமாக 20 ரூபாய்க்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ₹21 – 37, முட்டைக்கோஸ் ₹10 – 15, சௌ சௌ ₹10 – 15, வாழைப்பூ ₹6 – 12, வாழைத்தண்டு ₹10 – 15 போன்றவை எல்லாம் குடும்பங்களுக்கு ஏற்ற விலையில் இருந்தன. மழைக்காலத்தில் கூட இவ்வளவு மலிவு விலை கிடைத்தது எனப் பலரும் ஆச்சரியப்பட்டனர்.

34
பூண்டு குழம்பு தேவையில்லை

அதே சமயம் பட்டர்பீன்ஸ் (₹68 – 90), அவரைக்காய் (₹70 – 130), பச்சை பட்டாணி (₹70 – 80), இஞ்சி (₹70 – 90) போன்ற சில காய்கறிகள் மட்டும் சற்று உயர்ந்த விலையில் இருந்தன. பூண்டு விலையும் வழக்கம்போல் அதிகம்; பெரிய பூண்டு ₹350 – 520 வரை. 

44
மழையிலும் பொங்கிய சந்தோஷம்

மொத்தத்தில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்யும் மழையின் பின்னணியிலும், கோயம்பேட்டில் வரத்து அதிகரித்ததால் விலை உயர்வு ஏற்படாமல்  இருப்பது பொதுமக்களுக்கு பெரிய நிம்மதி அளிக்கிறது. “இது ரெயினும், ரேட்டும் பாராட்டக் கூடிய நாள்!” என்று சந்தைக்கு வந்த பலர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories