கோடை காலத்தில் இனி பவர்கட்டே இருக்காது! காலிப்பணியிடங்கள் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன செந்தில் பாலாஜி!

கோடையில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது. மின் தேவை அதிகரிப்பை சமாளிக்க டெண்டர் கோரப்பட்டு என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Uninterrupted electricity in summer: Minister Senthil Balaji tvk
மின்தேவை அதிகரிப்பு

எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை வெயிலும் தொடங்கியுள்ளது. இதனால், ஏசி, ஏர் கூலர், மின் விசிறி ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்ததால் மின்தேவையும் அதிகரிக்கும். இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்படும். இதனை தடுக்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Uninterrupted electricity in summer: Minister Senthil Balaji tvk
அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை அளிப்பது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதையும் படிங்க: Power Cut in Tamil Nadu: தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட் வெளியானது!


சீரான மின் விநியோகம்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி: கோடைக் காலத்தை பொறுத்த வரை எந்த வித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோடைக் காலம்

தமிழகத்தில் ஆண்டுக்கு மின் பயன்பாடு  1 லட்சத்து 13 ஆயிரம் மில்லியன் யூனிட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் அதிகபட்சமாக 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம். கோடைக்காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 6000 மெகா வாட் அளவுக்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படும். ஆகையால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 8 அல்லது 9 ரூபாய்க்கு வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் உஷார் மக்களே! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

துணை மின் நிலையங்கள்

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் ஓவர்லோடு மற்றும் லோ வோல்டேஜ் இருக்கிறதோ அதையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய பகுதியில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றில் 250 துணை மின் நிலையங்களுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுத் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்பொழுது பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

காலிப் பணியிடங்கள்

மின்சாரத்துறையில் மூன்றில் 1 ஒரு பங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆகையால் மின்சாரத்துறையில் உள்ள அவசியமான காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 2030க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தை சமாளிப்பதற்கு மின்வார வாரியம் தயாராக உள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Latest Videos

vuukle one pixel image
click me!