பேருந்து பயணிகள் இனி எத்தனை முறை வேண்டுமானலும் பயணிக்கலாம்- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு

சென்னையில் சிங்கார சென்னை பயண அட்டையை ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார். இந்த அட்டையின் மூலம் பயணிகள் எளிதாக ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்.

Minister Sivasankar launched the Singara Chennai Bus Travel Card KAK

Singara Chennai Bus Travel Card : தமிழக மக்களுக்கு அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் எந்த இடத்திற்கு வேண்டும் என்றாலும் சென்று சேர முடியும். மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னையில் அரசு பேருந்தின் பயன் கேட்கவா வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதற்கு ஏற்ப தொழில் நுட்பங்களும் மாறி வருகிறது. இந்த நிலையில்   மாநகர போக்குவரத்து கழகத்தில் சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலை நோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Minister Sivasankar launched the Singara Chennai Bus Travel Card KAK

சிங்கார சென்னை பயண அட்டை

 மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக "சிங்கார சென்னை" பயண அட்டைகள் வழங்கப்படுகிறது. இதில், 30.000-க்கும் மேலான பயண அட்டைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் 16,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


100 ரூபாய்க்கு சிங்கார சென்னை அட்டை

மேலும் இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பயணிகள் பயன்பாடு அதிகம் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் இந்த "சிங்கார சென்னை" பயண அட்டை ரூ.100/-க்கு வழங்கப்படவுள்ளது. இதில் ரூ.50/- மதிப்புக்கான பயணம் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இவ்வட்டைகளை இணையவழி சேவை. கைப்பேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் விற்பனை மையங்கள் மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எண்ணிகையற்ற பயணம் செய்யலாம்

இந்த திட்டத்தினை தலைமைச் செயலகத்தில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி  மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் "சிங்கார சென்னை" பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த சிங்கார சென்னை பயண  அட்டையில் ஏற்கனவே 20 பயண நடைகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறை மாற்றப்பட்டு, பயணிகள் எண்ணிக்கையற்ற நடைகளை மேற்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

ஈஸியாக ரீசார்ஜ் செய்யலாம்

இதுமட்டுமின்றி. இவ்வட்டையின் பின்புறம் உள்ள கியூ.ஆர் குறியீடை பயணிகள் தங்களின் கைப்பேசி செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், ரீசார்ஜ்  செய்த பின் அவ்வட்டையை புதுப்பிக்க பயணிகள் என்.எப்.சி. தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசிகள் மூலம் தாமாகவே ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் புதுப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

vuukle one pixel image
click me!