இது மாதிரி திரும்பவும் நடந்தா அவ்வளவு தான்! ஆசிரியர்களுக்கு பறந்த கல்வித்துறையின் எச்சரிக்கை!

ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வினாத்தாள்கள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Annual Exam! Director of Primary Education warns teachers tvk
தொடக்கக் கல்வி இயக்ககம்

ஒன்று முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 08 முதல் 24ம் தேதி வரை  நடைபெற உள்ள நிலையில் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Annual Exam! Director of Primary Education warns teachers tvk
வினாத்தாள்கள் மூக ஊடகங்களில் வெளியானது

அதாவது நடப்புக் கல்வியாண்டில் டிசம்பர் மாதம் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றபோது ஒரு சில மாவட்டங்களில் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் ஆசிரியர்களின் வழியாக பொதுவெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவ்வாசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . 


ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாள்

எனவே ஏப்ரல் 08 முதல் 24ம் வரை நடைபெற உள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுக்குரிய வினாத்தாள்களை பள்ளியின் EMIS உள்நுழைவின் வழியாக சென்று பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாள்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக EMIS உள்நுழைவில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர் எண்ணிக்கை, பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாத வகையில் கவனத்துடன் செயல்பட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கை

இனிவரும் காலங்களில் வினாத்தாள்கள் கசிவு முன்கூட்டியே வெளியானால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்,  பிற ஆசிரியர்கள் அவ்வொன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த வட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி நுறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

எனவே தேர்வு பணிகளில் சுணக்கம் இல்லாமல் கவனமாக செயல்பட தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி வழங்குவதோடு ஆண்டு இறுதித் தேர்வினை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் முடித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

vuukle one pixel image
click me!