ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு.! திடீரென தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 இடங்களுக்கு இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recruitment notification has been issued for teachers based on reservation KAK

School Teachers Recruitment notification : கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும், அந்த வகையில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் தேவை உள்ளது. ஆனால் பல இடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கான நாட்காட்டியை அவ்வப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவேற்றம் செய்யும். 

Recruitment notification has been issued for teachers based on reservation KAK
School Teacher

காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள்

ஆனால்  நீண்ட காலமாக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகமல் இருந்து வந்தது. குறிப்பாக   2024ம் ஆண்டில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள்,  2768 இடைநிலை ஆசிரியர்கள்,  200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 4000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்,  56 சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்  உள்ளிட்ட 10, 355 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


school teacher

திருத்தப்படாத விடைத்தாள்கள்

ஆனால், கடந்த ஆண்டு  முழுவதும் ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  மேலும் 2768 இடைநிலை ஆசிரியர்களை  தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித்  தேர்வு நடத்தப்பட்டாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட  தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்தது.

school teacher

1000 பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு

இந்த நிலையில் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2700 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கூடுதலாக அறிவிக்கப்பட்ட 1000 இடங்களுக்கு தற்போது இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

vuukle one pixel image
click me!