வேலையே கிடைக்கவில்லையா.! 7200 ரூபாயை அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Oct 23, 2025, 10:04 AM IST

Unemployment allowance scheme : தமிழக அரசு வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கல்வித் தகுதிக்கேற்ப ரூ.2400 முதல் ரூ.7200 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

PREV
14

தமிழக அரசு அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு தொழில் நிறுவனங்களை தமிழக முழுவதும் தொடங்கி வருகிறது. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இருந்த போதும் வேலை இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது.

அந்த வகையில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

24

எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி/ எச்.எஸ்.சி/ பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்.

34

1. விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

44

அந்த வகையில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 200 ரூபாய் என் வருடத்திற்கு 2400 ரூபாய் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் என 3600 ரூபாயும், டிப்ளமோ மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய் என வருடத்திற்கு 4800 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே போல கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாய் என 7200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண். உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories