Delta Weatherman : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஒரு பெயரிடப்பட்ட புயலாக மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக தொடங்கியுள்ளது கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது.
இது வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
24
தமிழகத்தை அச்சுறுத்தும் புயல்கள்
எனவே நவம்பர், டிசம்பர் மாத மழையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வருகிறார்கள். அதிலும் இந்த ஆண்டு 3 புயல்கள் தமிழகத்தை நெருங்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையின் முதல் புயல் அடுத்த இரு நாட்களில் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் இன்று பரவலான மழை வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
34
சென்னையில் மழை
வடகோடி மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் (#KCCT) ஆகிய இடங்களில் இன்று மாலை முதல் இரவுக்குள் இடி மின்னலுடன் கூடிய பரவலான கனமழை வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மழை குறைய வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு குறைவு. வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், நாளை (அக்டோபர் 24, 2025) தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது அக்டோபர் 26, 2025 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இந்த அமைப்பு ஒரு பெயரிடப்பட்ட புயலாக மாற வாய்ப்பு உள்ளது என டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.