அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் திடீர் ட்விஸ்ட்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Published : Oct 23, 2025, 08:14 AM IST

துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றியது ஏன் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை வேலூருக்கு மாற்றக்கோரிய துரைமுருகனின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி.

PREV
15
அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது, வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் துரைமுருகன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்துக்கள் குவித்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

25
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்து வந்த வேலூர் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கை தினமும் என்ற அடிப்​படை​யில் மீண்​டும் மறு​வி​சா​ரணை நடத்தி 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என்று கடந்த ஏப்​ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது..

35
சொத்து குவிப்பு வழக்கு

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

45
உச்ச நீதிமன்றம் தடை

இந்த உத்தரவை எதிர்த்து துரைமுருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

55
காவல் துறைக்கு உத்தரவு

இதனையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் என விரிவாக பதில்மனு தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories