இந்த நிலையில் தான் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்துக்களின் பிரதான பண்டிகையான தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் உதயநிதி. ஆனால் நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ற வார்த்தையை அவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் இதேபோல் 'நம்பிக்கையுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்' என்று உதயநிதி கூறியிருந்தார்.
பாஜக, இந்து அமைப்பினர்கள் கேள்வி
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக உதயநிதி அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் தீபாவளி வாழ்த்துகள் சொல்லியிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளுக்கு பொதுவாக வாழ்த்து சொல்லும் உதயநிதி, இந்து பண்டிகையான தீபாளிக்கு மட்டும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ற வார்த்தையை கூடுதலாக சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே பாஜக மற்றும் இந்து அமைப்பினர்களின் கேள்வியாக உள்ளது.