கிளாம்பாக்கம் செல்வது ரொம்ப ஈஸி..! சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்!

Published : Oct 16, 2025, 06:06 PM IST

வெளிமாவட்ட பயணிகள் எளிதில் கிளாம்பாக்கம் செல்ல வசதியாக சென்னையில் கூடுதல் நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
தீபாவளி சிறப்பு பேருந்துகள்

நாடு முழுவதும் வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்று முதல் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக இன்று (16ம் தேதி) முதல் வரும் 19ம் தேதி வரை 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

24
தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாநகர பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாநகர பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

34
கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் சிட்டி பஸ்கள்

இந்நிலையில், பயணிகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் எளிதாக செல்வதற்கு வசதியாக சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும். வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகர் போக்குவரத்துக்கழகம் கூறியுள்ளது.

44
மொத்தம் எத்தனை பேருந்துகள்?

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்களுக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories