திமுகவிற்கு தாளம் போடும் ஜி.கே.மணி..! உடனே தலைவர் பதவியில் இருந்து நீக்குங்க- கொதிக்கும் அன்புமணி

Published : Oct 16, 2025, 03:37 PM IST

Anbumani vs Speaker Appavu : பாமகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை அங்கீகரிக்க சபாநாயகர் அப்பாவு மறுப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்துள்ளார்.

PREV
16

பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் தந்தை- மகன் என கட்சி இரு பிரிவாக பிரிந்துள்ளது. இதனையடுத்து ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி மற்றும் அருளை சட்டமன்ற கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அன்புமணி அறிவித்தார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி எனவும், கொறடா அருள் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சட்டபேரைவை சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவமாக அன்புமணி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் திமுகவுக்கு தாளம் போடுவவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் ஜனநாயகப் படுகொலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

26

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த செப்டம்பர் 24&ஆம் தேதி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் எனது முன்னிலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டு புதிய தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அவர்களும், துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சதாசிவம் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய நியமனங்களுக்கு அன்றே எனது தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 24&ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு நான் முறைப்படி கடிதம் எழுதியிருந்தேன்.

36

எனது கடிதத்தை கடந்த மாதம் 25&ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு புதிய நிர்வாகிகளும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு அவர்களும் பேரவைத் தலைவரை சந்தித்து அளிக்க நேரம் கேட்டனர். அப்போது பேரவைத் தலைவர் சென்னையில் இல்லாத நிலையில், அவர் கேட்டுக் கொண்டவாறு பேரவைச் செயலாளரிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. பேரவைத் தலைவரிடமும் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டுக் கொண்ட பேரவைத் தலைவர் விதிமுறைகளின் படி விரைந்து முடிவெடுத்து அறிவிப்பதாக பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

46

இன்றுடன் 22 நாள்களாகிவிட்ட நிலையில் பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றி விட்டு, அப்பதவிக்கு புதிதாக தேந்தெடுக்கப்பட்டவரை பேரவைத் தலைவர் அங்கீகரிக்கவில்லை. பேரவைக் கூட்டம் தொடங்கிய நாளில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சி நிர்வாகிகளும், வழக்கறிஞர் பாலுவும் மீண்டும் பேரவைத் தலைவரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்கள். அப்போது எனது கடிதம் ஆய்வில் இருப்பதாகக் கூறிய பேரவைத் தலைவர், அவை முன்னவரான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்து பேசும்படி கூறினார். 

அதன்படியே பா.ம.க. குழுவினர் முன்னவர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள். அவரும் பேரவைத் தலைவரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். ஆனால், அதன்பின் இரு நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்று கூறிக் கொண்டு ஜி.கே.மணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நியாயமற்றவை.

56

இந்த சிக்கல் குறித்து பேரவைத் தலைவரிடம் கேட்கும் போதெல்லாம், இது குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என்ற பழைய பல்லவியையே அவர் மீண்டும், மீண்டும் பாடி வருகிறார். இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? என்பது தான் தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். மீதமுள்ள நால்வரின் மூவர் கூடி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளனர். 

அவர்கள் மூவரும் நேரடியாகவே பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். எனது தலைமையில் செயல்படும் கட்சி தான் பா.ம.க. என்று தேர்தல் ஆணையமும் அறிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தெளிவான முடிவை எடுக்காமல் ஆய்வு செய்து வருகிறேன் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கூறிவருவதில் பெரும் உள்நோக்கம் இருக்கிறது.

66

திமுகவைச் சேர்ந்த பி.டி. ஆர் பழனிவேல் இராஜன் போன்ற பெருந்தகையாளர்கள் அப்படித் தான் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர்பவர்கள் அதேபோல் செயல்படுவதன் மூலம் தான் அந்த இருக்கைக்கு பெருமை சேர்க்க முடியும். எனவே, ஆளுங்கட்சியின் விருப்பப்படி, ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்துவதை விடுத்து,

 பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜனநாயகப் படுகொலை தொடர்ந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories