இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி, ''தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 26 மாதங்களாக ஒவ்வொரு மகளிருக்கும் சுமார் 26,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
புதிய விண்ணப்பங்கள் எத்தனை?
இதுவரை மொத்தமாக கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பெண்கள் மகளிர் உதவித்தொகை பெறும் வகையில் முதல்வர் இந்த திட்டத்தில் சில விதிகளை தளர்த்தினார். புதிதாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்தனர்.