3. வீட்டு சாப்பாட்டு என்றால் உயிர்
உதயநிதி வெளியூர்களுக்குச் சென்றால் கூட ஆடம்பர ஹோட்டல்களைத் தவிர்த்து, கட்சி நிர்வாகிகள் வீட்டில் சமைக்கப்படும் சாதாரண உணவையே விரும்பி உண்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அசைவ உணவுகளை விரும்பி உண்பாராம்.
4. 7ம் எண் மீது சென்டிமென்ட்
உதயநிதி கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர், ஜோதிடங்கள் மீது நாட்டமில்லாதவர் என்றாலும் 7 என்ற எண்ணின் மீது அவருக்கு ஒரு தனிப்பட்ட செண்டிமெண்ட் உண்டு என கூறப்படுகிறது. அவரது பல முக்கிய முடிவுகள் அல்லது வாகன எண்களில் இந்த எண்ணின் தாக்கம் இருப்பதாக நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 7 அவரது லக்கி எண்னாக கருதப்படுகிறது.
5. உடற்பயிற்சியில் நாட்டம்
அரசியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை உதயநிதி தவற விடுவதில்லையாம். காலை, மாலை என எப்போது கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை உதயநிதி வழக்கமாக வைத்துள்ளதாக கூறுகிறார்கள். உடல்நலனை பராமரிப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்.