விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.. குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்

Published : Mar 19, 2026, 01:40 PM ISTUpdated : Mar 19, 2026, 02:45 PM IST

தூத்துக்குடி அருகே 12ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் குற்றவாளி கைது.

PREV
14
12ம் வகுப்பு மாணவி கொலை

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வெட்டு காயங்களுடன் கொடூரமான முறையில் பலாத்காரம்  செய்யப்பட்டு கொலை சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து உயரதிகாரிகள் சமாதானம் செய்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க 10க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

24
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

ஆனால் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி திமுக அரசை கடுமையான விமர்சித்து வந்தனர். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். மேலும் பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தொண்டை எலும்பு, கழுத்து எலும்பு உடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

34
5 நபர்களின் டிஎன்ஏ மாதிரி பரிசோதனை

இந்நிலையில் பள்ளி மாணவியின் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் 5 நபர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் சம்பவ நேரத்தில், அந்த பகுதியில் பதிவான 1,600 செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது வரை 212 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

44
குற்றவாளி கைது

அந்த டிஎன்ஏ மாதிரி பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்பது உறுதியானது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபரிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories