இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி வந்திருப்பது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு கிராம மக்கள் யாரேனும் உதவி செய்தனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதாகியுள்ள தர்ம முனீஸ்வரன் மீது 2020ம் ஆண்டு எட்டயபுரம் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். தர்ம முனீஸ்வரன் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை கொலை செய்துள்ளார். தற்போது அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.