உதயநிதியின் பிரச்சார பாணி அற்புதம்! சசிகலா பேச்சில் புதிய தெளிவு! ஜெ.நிழல் புகழாரம்.. இபிஎஸ் குறித்து அதிர்ச்சி தகவல்!

Published : Apr 13, 2026, 01:19 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், தற்போதைய தமிழக தேர்தல் களத்தில் தனது பேச்சாற்றலால் தன்னை வியக்க வைத்த தலைவர்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். 

PREV
14
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிமுக, திமுக, தவெக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் களத்தில் நான் பார்த்து வியந்த பேச்சாளர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இப்போதுதான் நிஜமான சூட்டைப் பிடித்திருக்கிறது. வேட்பாளர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் மக்களை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முறை களத்தில் நான் பார்த்து வியந்த பேச்சாளர்களைப் பற்றி இங்கே பகிர விரும்புகிறேன். இவர்கள் நாளுக்கு நாள் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களை ஆரம்பத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு புரியும்.

24
புயல் காற்றாக எடப்பாடியார்

​​"புரட்சித் தமிழர்" எடப்பாடியார் அவர்கள் இந்தத் தேர்தலில் தனி ஒரு ஆளாகத் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் இவ்வளவு ஆர்வமாக வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்குத் தன்னை ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறார். சொல்ல வந்த கருத்தை மிகத் தெளிவாகவும், மக்கள் மனதைத் தொடும் வகையிலும் அவர் முன்வைக்கும் விதம் வியக்க வைக்கிறது. மக்கள் மொழியில், உணர்ச்சிகரமாக உள்ளபடி பேசுகிறார்.

34
"​நையாண்டி" நாயகன் உதயநிதி ஸ்டாலின்

​அடுத்ததாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருடைய பிரச்சாரப் பாணி மிகவும் அற்புதம். எதார்த்தமான பேச்சு, இடையில் அரசியலை நையாண்டி செய்யும் விதம் எனத் தன் பேச்சை ஒரு கவர்ச்சிகரமான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார். மேடையில் அவர் காட்டும் அந்த இயல்பான அணுகுமுறை மக்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. நீண்ட கால பயிற்சி அவரை இன்று தேர்ச்சி பெற வைத்திருக்கிறது.

44
போராட்ட களத்தில் புரட்சித்தாய்

​அதேபோல், "புரட்சித் தாய்" அவர்களும் இந்த முறை களத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தொகுதி தொகுதியாகச் சுற்றி வரும் அவரது பேச்சில் ஒரு புதிய தெளிவு பிறந்திருக்கிறது. அழுத்தமான கருத்துக்களை ஆழமாகப் பதிய வைப்பதில் அவர் காட்டும் ஆர்வம் இந்தத் தேர்தல் களத்தில் ஒரு தனி அடையாளமாகத் தெரிகிறது. ​இந்த மூவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், இந்த தேர்தல் பிரச்சார மேடையில் அவர்கள் காட்டும் உழைப்பும், மாற்றமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இது ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகச் சொல்வது அல்ல; நடுநிலையாக நின்று கவனிக்கும் எவருக்கும் இந்த உண்மை புரியும். நாளுக்கு நாள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்பவர்களை மனதாரப் பாராட்டுவதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு அழகு.

​​"விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கலாம். ஆனால், தன் பேச்சால் மக்களின் இதயங்களைத் ஒருவர் தொடுகிறார் என்றால், அங்கே அவருடைய உழைப்பும் அனுபவமும் மட்டுமே பேசுகிறது. திறமையை ரசிக்கத் தெரியாதவர்களுக்கே எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்; அரசியலை ஆரோக்கியமாகப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories