இனி இல்லை லாஸ்ட் பெஞ்ச்.! மாணவர்களுக்கு அசத்தலான திட்டம்- பள்ளி கல்வித்துறை அதிரடி

Published : Jul 14, 2025, 12:50 PM ISTUpdated : Jul 14, 2025, 12:53 PM IST

தமிழக அரசுப் பள்ளிகளில் கடைசி பெஞ்ச் முறையை மாற்றி, 'ப' வடிவ வகுப்பறை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, ஆசிரியர்-மாணவர் தொடர்புகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
15
அரசு பள்ளி மாணவர்களுக்கான சலுகைகள்

தமிழகத்தில் கல்விக்கா பல்வேறு புதிய புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதன் காரணமாக மாணவர்களின் பள்ளி வருகை பதிவு அதிகரித்துள்ளது. மேலும் உயர்கல்வி சேரும் மாணவர்களுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்காக கல்வி தரத்தை அதிகரிக்க பள்ளி வகுப்பறைகளிலி ஸ்மார்ட் ரூமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25
இனி லாஸ்ட் பெஞ்ச்இல்லை

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் முதல்வரிசை, இரண்டாம் வரிசை என உள்ளதை மாற்றி அமைக்கப்படும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் படி, இனி கடைசி பெஞ்ச் இல்லாத வகையில் ப வடிவில் வகுப்பறைகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் ப வடிவில் பள்ளிகளில் அமரும் போது ஒவ்வொரு மாணவரும் பாடம் நடத்தப்படும் பலகையையும் ஆசிரியரையும் தெளிவாகப் பார்க்க முடியும். 

மேலும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுடனும் எளிதாக கண் தொடர்பு கொள்ள முடிய வாய்ப்பு ஏற்படுகிறது. ஒரு வகுப்பறையில் இருக்கும் அத்தனை மாணவர்களும் ஒன்றோடு ஒன்றாக நட்பாகப் பழக வேண்டும். சிறுசிறு குழுக்களாக பிரிந்துவிடாமல் ஒன்றுமையாக இருக்க வாய்ப்பு உருவாகும்.

35
பள்ளிகளில் ப வடிவ வகுப்பறைகள்

‘ப’ வடிவ அமைப்பு கலந்துரையாடல்கள், கேள்வி-பதில் அமர்வுகள் மற்றும் சகாக்களின் கற்றலை ஊக்குவிக்கிறது. மாணவர்கள் ஒருவரையொருவர் சிறப்பாகக் காணவும் கேட்கவும் முடிவதால், மாணவர்களுக்கிடையே ஒத்துழைப்புக்கு அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது. ஆசிரியர்கள் ‘ப’ வடிவத்தின் மையப்பகுதிக்குள் செல்ல முடிவதால் அனைத்து மாணவர்களையும் எளிதாகக் கண்காணிக்க உதவுகிறது.

கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் கூட இந்த வட்டமான, உள்ளடக்கிய அமைப்பில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்த ப வடிவிலான வகுப்பறைகள் இன்று முதல் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக கடைசி பெஞ்ச் இல்லாத நிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

45
ப வடிவ வகுப்பறைகள் பாதிப்பு என்ன.?

அதே நேரம் ப வடிவிலான வகுப்பறைகள் மூலம் ஒரு சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையில் 20 முதல் 25 மாணவர்கள் இருக்கும் பள்ளி வகுப்பறைகளில் இந்த்திட்டம் செயல்படுத்த முடியும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் 50 முதல் 60 மாணவர்கள் இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி ப வடிவிலான வகுப்பறைகள் உருவாக்க முடியும், 

மூன்று பக்க சுவற்றை ஒட்டியும் நெருக்கி நெருக்கி பென்ச்சுகளை வரிசைப்படுத்தி மாணவர்கள் அமர்ந்திருக்கும் நிலையில் வெளியே சென்று உள்ளே வருவதற்கெல்லாம் வசதியாக இருக்காது. மேலும் இரண்டு மூலைகளில் இருக்கும் மாணவர்களுக்கும் போர்டில் என்ன எழுதினாலும் சரியாக தெரியாது. நம்முடைய வகுப்பறைகள் இந்த 'ப' வடிவ முறைக்கு ஏற்றார் போல கட்டமைப்பு இல்லையெனவும் கூறப்படுகிறது.

55
மாணவர்களுக்கு தலைவலி, கண் வலி பாதிப்பு

மற்றொரு தகவலாக வாரத்திற்கு 5 நாட்கள், தினமும் 6 மணிநேரம் ஒரே பக்கமாக கழுத்தையும் தலையையும் திருப்பினால் கழுத்தில் உள்ள எலும்புகளும் தசைகளும் பாதிக்கப்படும். கண்ணாடி அணிந்த குழந்தைகள் கண்ணாடியின் ஒளி மையம் வழியாக பார்க்காமல் பக்கவாட்டின் மூலம் பார்ப்பதால் கண்ணின் நெருக்கடி அதிகரிக்கும். இதனால் மாணவர்களுக்கு தலைவலி மற்றும் கழுத்து வழி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories