TASMAC
ஒரு காலத்தில் மதுக்கடைக்கு செல்பவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து சென்று வந்தார்கள். ஆனால் இன்று மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்கள் நிகராக பெண்களும் மதுக்குடிக்கும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எது இருக்ககோ இல்லையோ மது இல்லாமல் இருப்பதில்லை. அதேநேரத்தில் துக்க நிகழ்ச்சி என்றாலும் இதே நிலை தான். பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் பரவி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.
Tamilnadu Government
நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு இயந்திரம் டாஸ்மாக் வருமானத்தை நம்பியே இயங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!
TASMAC Holiday
ஒரு பக்கம் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கும் நிலையில் மற்றொரு பக்கம் மது விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அரசு வகுத்து வருகிறது. அரசு துறையில் பல்வேறு துறைகள் இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி குடிமகன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!
Tasmac liquor sale
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ஜனவரி 15ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம் ஆகிய தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டும்.
TASMAC News
ஜனவரி 15 (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர தினம் மற்றும் 26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடுமுறையானது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொருந்தும்.