MyTVK: 1967, 1977 மாதிரி 2026ல் நாம தான்! அண்ணா வழியில் பயணம் - மாஸ் காட்டும் விஜய்

Published : Jul 30, 2025, 12:21 PM ISTUpdated : Jul 30, 2025, 01:10 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ் என்ற அண்ணாவின் வழியில் பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

PREV
14
தமிழக வெற்றி கழகத்தின் புதிய செயலி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தங்களது இருப்பை காட்டிக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகமும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார்.

24
அண்ணா வழியில் பயணிப்போம்

அப்போது பேசிய விஜய், தமிழகத்தில் 1967, 1977 போன்று 2026 தேர்தல் அமைய உள்ளது. 2026 தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுபோம். 1967, 1977ல் பலம் வாய்ந்த அதிகாரத்தில் இருந்த கட்சிகள் அதிகாரித்தில் இருந்து அகற்றப்பட்டன. 2026ல் அதே போன்று நாம் செய்து காட்டுவோம்.

மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ் என்ற பேரறிஞர் அண்ணாவின் வழியில் பயணிப்பொம். மதுரை மாநாட்டில் சந்திப்போம். அதன் பின்னர் தொடர்ந்து மக்களுடன் தான் பயணிக்கப் போகிறோம்” என்று பேசினார்.

புதிய செயலியில் என்ன ஸ்பெஷல்?

தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலில் ஒரே நொடியில் 18000 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்றும், ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தி 5 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த செயலியில் இணைய OTP தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
1967, 1977ல் என்ன நடந்தது?

தமிழகத்தில் 1967க்கு முன்னர் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்தி எதிர்ப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என பல்வேறு காரணங்களை தீவிரமாக மக்களிடம் கொண்டு சேர்த்த அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.

44
2026ல் நாம தான்!

இதே போன்று திமுக.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். 1977 தேர்தலில் திமுக.வுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு மிக மிக குறுகிய காலத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்த வரலாற்றை தான் 2026ல் நாம் செய்து காட்ட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories