விஜய் மாநாட்டிற்கு ஓகே சொன்ன போலீஸ்! களத்தில் குதிக்கும் த.வெ.க.!

Published : Aug 11, 2025, 08:17 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக ஆகஸ்ட் 25ல் இருந்து தேதி மாற்றப்பட்டது. காவல்துறையின் கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

PREV
13
த.வெ.க. 2வது மாநாடு தேதி மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

முதலில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக ஆகஸ்ட் 21-க்கு மாற்றியமைக்கப்பட்டது. காவல்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, கட்சித் தலைவர் விஜய் இந்த முடிவை எடுத்தார்.

23
காவல்துறையின் கேள்வியும் த.வெ.க.வின் பதிலும்

மாநாட்டுக்கான தேதி மாற்றப்பட்ட பின்னர், த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அக்கட்சியினர் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மனு அளித்தனர்.

அப்போது, மாநாடு நடைபெறும் இடம், எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு, வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் குறித்த 42 கேள்விகளை காவல்துறை முன்வைத்தது. இந்தக் கேள்விகளுக்கு த.வெ.க. தரப்பில் விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.

33
மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி

இதைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் முக்கிய அரசியல் முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories