ராகுல் காந்தியை கைது செய்வதா? தேர்தல் நியாயமாக நடக்கணும்! பொங்கியெழுந்த விஜய்! பரபரப்பு ட்வீட்!

Published : Aug 11, 2025, 03:26 PM ISTUpdated : Aug 11, 2025, 03:33 PM IST

டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணியாக சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
14
TVK Vijay Condemns Rahul Gandhi's Arrest

பீகாரில் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. மொத்தம் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும் டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

24
ராகுல் காந்தி கைதுக்கு விஜய் கண்டனம்

இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை கைது செய்ததற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

34
நியாயமானத் தேர்தல் நடைபெற வேண்டும்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். 

அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

44
ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் செயல்

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது. 

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories