இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்கை தொடர்ந்து மின்னணு வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திமுக அரசு 54 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் 79, அதிமுக 59 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி திருச்சி கிழக்கு, பெரம்பூர், போபிசெட்டிபாளையம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், தி.நகர், கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்பத்தூர், மதுரவாயல், திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெருவாரியான இடங்களில் தவெக முன்னலை வகித்து வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, ரகுபதி, அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.