TVK Vijay: கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடந்த தவெக பொதுக்குழுக் கூட்டத்தில், 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியினர் விஜய் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
24
சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து ஒரு மாதங்களுக்கு பிறகு கட்சி பணிகளில் ஈடுபட ஆரம்பித்து அதிரடி காண்பித்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது.
34
முதல்வர் வேட்பாளர் விஜய்
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார். எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் சுமார் 2000 பேர் பங்கேற்றனர். இதனையடுத்து கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும், முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தவெகவை தங்கள் கூட்டணியில் எப்படியாவது சேர்க்க வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் தொடர் முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த அழைப்பை தற்போது தவெக நிராகரித்துள்ளது. இதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப்போட்டி என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி இணைய உள்ளதாகவும், அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற பிரசார பயணத்தின் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.