இந்த கூட்டத்தில் என்னால் வர முடியல! விஜய் இங்கு வரப்போறாரு! அப்போ எப்படி இருக்கும் பார்த்துக்கோங்க! அலறவிடும் ஆனந்த்!

Published : Aug 13, 2025, 10:29 AM IST

மதுரையில் வருகிற 21ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தலைவர் விஜயின் முகத்தை காட்டினாலே கூட்டம் கூடிவிடும் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

PREV
14

மதுரையில் வருகிற 21ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் பேனர்கள், கட்சிக் கொடிகள் வைக்க கூடாது, ஊர்வலமாக வரவோ, போகவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

24

இந்நிலையில் தேனி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். அவருக்கு நிர்வாகி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த்: மற்ற கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும், வாகனத்தில் ஆட்களை அழைத்து வர வேண்டும். பத்து நாட்களாவது ஆகும். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தலைவர் விஜயின் முகத்தை காட்டினாலே கூட்டம் கூடிவிடும்.

34

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வரவேண்டும். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் விக்கிரவாண்டியில் 14 லட்சம் பேரை கூட்டிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக வெற்றி பெறுவார். வீடு வீடாக தெருத்தெருவாகச் சென்று மக்களின் குறைகளை கேட்கின்ற ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான்.

44

கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழக வெற்றிக்கழகத்தின் கோட்டையாக மாற்ற வேண்டும் அதற்கு தொண்டர்கள் நிர்வாகிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என ஆனந்த் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories