தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியால் தமிழகத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்கும் உரிமையை இழக்கலாம் என்ற தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியை தமிழகத்தில் அதிமுக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே SIR தொடர்பாக தவெக தலைவர் விஜய் பரபரப்ப வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள SIR காரணமாக தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வாக்குரிமை இல்லை என்ற நிலை கூட ஏற்படலாம். அனைவரும் இந்த விவகாரத்தில் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
25
6.36 கோடி வாக்காளர்களை ஒரே மாதத்தில் அணுக முடியாது
நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது ஓட்டுரிமை பறிக்கப்பட வாய்ப்பு, நான் பயமுறுத்தவில்லை, இது தான் உண்மை. வடகிழக்கு பருவமழை, பண்டிகைகள் வருவதால் SIR நடவடிக்கை மக்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். 6.36 கோடி வாக்காளர்களை ஒரே மாதத்தில் அணுக முடியாது. இதனால் SIR கணக்கீட்டு படிவம் நிரப்பாதவர்களின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உருவாகும். ஜனநாயகத்திற்கு விராதமான இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
35
BLOகள் யார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
வாக்குரிமை என்பது நமது உரிமை மட்டும் அல்ல, அது நமது வாழ்க்கையும் ஆகும். SIR பணிகள் முடிந்த பின் புதிய பட்டியல் வரும் வரை நாம் வாக்காளர்களா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் உங்களுக்கான BLO யார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மொத்த வாக்காளர்களுக்கும் ஒரே மாதத்தில் படிவங்கள் சென்று சேருமா? என்ற அச்சம் உள்ளது.
ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களுக்கு ஏன் புதிதாக படிவங்கள் வழங்குகிறார்கள் என்ற குழப்பம் உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் GEN Z வாக்காளர்கள் தான் மிக முக்கியமானவர்கள். இது வாக்காளர் பட்டியல் திருத்தம் தானா அல்லது குடியுரிமை மறு பதிவா? என்ற சந்தேகம் உள்ளது.
55
தவெகவினருக்கு SIR படிவம் கிடைப்பதில்லை..
தவெகவினருக்கு SIR படிவங்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. இதனை மேற்கொள்வது யார் என்பது உங்களுக்கு தெரியும். ஆட்சியாளர்களும், அவர்களுக்கு சாதகமாக செயல்படும் சிலரும் தான் இதனை செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.