இதுதொடர்பாக தவெக ஐடிவிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.