கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பின்னர் சுமார் 16 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செவ்வாய் கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
கடந்த மாதம் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட செயலாளர்கள் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
25
சிபிஐ கைக்கு மாறிய கரூர் விவகாரம்
வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ மேற்பார்வையில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
35
வேகமெடுக்கும் தவெக பணிகள்
உச்சநீதிமன்றம் தங்கள் கோரிக்கையை ஏற்றதால் நிம்மதியடைந்த தவெக.வினர் அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் விசாரணை சிபிஐ வசம் சென்றுவிட்டதால் தங்களை கைது செய்ய மாட்டார்கள் என்பதை உணர்ந்து ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய நீா்வாகிகள் தற்போது மீண்டும் பொதுவெளிக்கு வந்துள்ளனர். அந்த வகையில் பனையூரில் அமைந்தள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆனந்த் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
55
வாடிய முகத்துடன் புஸ்ஸி ஆனந்த்
வழக்கமாக மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் ஆனந்த் நேற்றைய தினம் சற்று மாறுதலாக சோர்வுற்ற உடல் தோற்றம், ஷேவிங் செய்யப்படாத வாடிய முகத்துடன் கூட்டத்தில் பங்கேற்றார். ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன ஆனந்துடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.