கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சூழலில், திமுகவை வீழ்த்துவோம் என ஒரு நிர்வாகி பதிவிட்டது பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
ஆனால் தவெக நிர்வாகிகள் சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே கரூரில் இருந்து காணமல் போய்விட்டனர். போலீசார் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடி நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
23
திமுகவை கதி கலங்க வைத்த மாவீரன்
இதனிடையே விரைவில் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தவெக நிர்வாகி லயோலா மணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தமிழ்நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கும் திமுகவை வீழ்த்தப் போகும் எங்களின் நாயகன். 75 ஆண்டுகள் பவள விழா கொண்டாடிய கட்சியை கதி கலங்க வைத்த மாவீரன். நாங்கள் சோர்வடையவில்லை சோதனைகளை கடந்து சாதனை செய்ய வீறு கொண்டு வருகிறோம்.
33
சமூக வலைதளங்களில் கிண்டல்
திமுகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் விட மாட்டோம் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பதிவிற்கு கீழே பலரும் தவெகவின் செயல்பாடுகளை விமர்சித்து கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த டயலாக் எல்லாம் நீ எலக்சன்ல ஜெயிச்சதுக்கு அப்புறம் சொல்ல வேண்டியது, கனவு உலகத்திலேயே வாழாதிங்க. ஃபர்ஸ்ட் இறந்தவர்கள் வீட்டுக்கு ஏன் போகல ஏன் ஓடி ஒளிஞ்சிருக்கீங்க ? உங்க மேல தப்பு இருந்தா வெளிய வந்து பேட்டி கொடுக்க வேண்டியது தானே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.