கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!

Published : Sep 10, 2026, 10:10 AM IST

TVK-Congress Alliance Row: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என பெயர் வைக்கப்பட்டாலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ், தவெக இடையே மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.

PREV
15
தவெக தலைமையில் புதிய கூட்டணி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தது. பெரும்பான்மைக்கு சில இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து 100 நாட்களையும் கடந்து விட்டது. இதில் இடதுசாரிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தவெகவுடன் தான் கூட்டணி என்பதை ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்து விட்டன.

25
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி

கூட்டணியில்லை; ஆனால் ஆட்சி அமைக்க ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இடதுசாரிகள் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக புதிய கூட்டணி உருவாக்கப்படுள்ளது வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கூட்டணிக்கு பெயர் வைத்தாலும், 2029 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

35
விஜய் தான் அடுத்த பிரதமர்

ஏனெனில் சமீபகாலமாக தவெக அமைச்சர்கள் சிலர் விஜய் பிரதமராக வருவார். அவருக்கு அந்த தகுதி உள்ளது என வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. ராகுல் காந்தி பிரதமராக விஜய் ஆதரவாக இருக்கிறார். அவரின் செல்வாக்கை வைத்து தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என கணக்கு போட்டிருந்த காங்கிரஸ், விஜய் தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசுவதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

தவெக அமைச்சர்களுக்கு காங்கிரஸ் பதிலடி

தவெக அமைச்சர்களுக்கு உடனடியாக பதிலடித்த மாணிக்கம் தாகூர் மற்றும் தவெக அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ''தவெக அமைச்சர்கள் ரசிக மனநிலையிலையே உள்ளனர். ராகுல் காந்தி பிரதமராக விஜய் ஆதரவு தெரிவிப்பார்'' என்று தெரிவித்தனர். நேற்று கூட்டத்திற்குப் பிறகு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விஜய்யின் தலைமையை கூட்டணி கட்சிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

"விஜய் தலைமையில் தான் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அவரது தலைமையில்தான் இந்த கூட்டணி செயல்படும்," என்று மாணிக்கம் தாகூர் கூறினார். மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் இந்த புதிய பெயரில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

45
மாணிக்கம் தாகூர் அதிருப்தி

ஆனாலும் மாநில அளவில் விஜய் தலைவராக இருப்பது வேறு, 2029 லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வேறு என்பதை மாணிக்கம் தாகூர் தெளிவாகப் பிரித்துக் காட்டினார்.

மாணிக்கம் தாகூரின் தனது பேச்சில், ''மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி' என்பது இந்தியா கூட்டணியின் ஒரு அங்கம். 2029 லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும்போதுதான், பரந்த இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். இந்தியா கூட்டணியின் இறுதி முடிவை அதன் கூட்டணி கட்சிகள் கூட்டாக எடுக்கும்'' என்று தெளிவுப்படுத்தினார்.

இறுதியாக இந்தியா கூட்டணி அறிவிக்கும் பிரதமர் வேட்பாளருக்காக விஜய் பிரச்சாரம் செய்வார் என்றும் சொல்லி முடித்தார். தவெக அமைசச்சர்கள் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என கூறி வரும் நிலையில், தங்களது நிலையை மாணிக்கம் தாகூர் போட்டு உடைத்தார். அதே வேளையில் தவெக தலைமை, விஜய்யை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதையும் தவெக சார்பில் யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை.

55
ராகுல் காந்தியை ஏற்காத ஆதர் அர்ஜூனா?

நேற்று நடந்த கூட்டத்துக்கு முன்னதாக பேசிய தவெக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘’2029 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் கணிசமான காலம் இருக்கிறது. நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வகிக்க வேண்டும்'' என்று கூறினார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் என்று கூறி விட்டதால் ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தானே அர்த்தம் எண்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தவெக, காங்கிரஸ் மோதல்

இதனால் தவெக தலைமையிலான கூட்டணி அமைந்து, பெயர் சூட்டப்பட்டாலும் யார் பிரதமர் வேட்பாளர் விஜய்யா? ராகுலா? என்பதில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தவெக மட்டுமின்றி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் கூட ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஆணித்தரமாக சொல்லாதது காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே நேற்று சம்பிரதாயத்துக்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனிமேல் தான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ், தவெக இடையே சண்டையே இருக்கு. ஆகவே இந்த கூட்டணி தேர்தல் வரை தாக்குப்பிடிப்பது கடினம் தான் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories